Home செய்திகள் மனிதநேய சேவையில் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்களின் பங்கு கருத்தரங்கு..

மனிதநேய சேவையில் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்களின் பங்கு கருத்தரங்கு..

by ஆசிரியர்

காரைக்குடி அழகப்பா பல்கலை., சார்பில் மனிதநேய சேவையில் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்களின் பங்கு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. தொடக்க விழாவில் யூத் ரெட் கிராஸ் துணை ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான முனைவர் கே.கணேசமூர்த்தி வரவேற்றார்.

பல்கலை., துணை வேந்தர் பேராசிரியர் என்.ராஜேந்திரன் துவக்கவுரை ஆற்றினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சிவகங்கை மாவட்ட சேர்ம ன் ஜி. பகீரத நாச்சியப்பன் தலைமை உரை நிகழ்த்தினார். ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம், பல்கலை கலை பாட பிரிவு மேலாண் டீன் முனைவர் வி.பாலச்சந்திரன் ஆகியோர் அறிமுக உரையாற்றினர். சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் டி.ஆர்.குருமூர்த்தி, கல்லூரி வளர்ச்சி கவுன்சில் டீன் முனைவர் இ. கண்ணபிரான் ஆகியோர் வாழ்த்துரை பேசினர்.

யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பா’ளரும், உதவி பேராசிரியருமான ஜி.விநாயக மூர்த்தி நன்றி கூறினார். முதல் அமர்வில் ரெட் கிராஸ் உருவான வரலாறு, அடிப்படை கொள்கைகள், யூத் ரெட் கிராஸ் உதயமான வரலாறு, அதன் கட்டமைப்பு மற்றும் ஜெனீவா கன்வென்சன் குறித்து ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம்,  இரண்டாம் அமர்வில் முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து முதலுதவி பயிற்றுநரும், பரமக்குடி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனருமான எம்.அலெக்ஸ் பேசினர்.

மூன்றாம் அமர்வில் உலகமயமாக்கல் பற்றி உயிர் மருந்து அறிவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பி.ரமேஷ் தங்கம், நான்காம் அமர்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஏ.கே.முருகன் பேசினர். சான்றிதழ் வழங்கும் நிறைவு விழாவில் யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பா’ளரும், உதவி பேராசிரியருமான ஜி.விநாயக மூர்த்தி வரவேற்றார்.

பல்கலை., பதிவாளர் முனை வர் எச்.குரு மல்லேஷ் பிரபு தலைமை வகித்து சான்றிதழ் வழங்கினார். ரெட் கிராஸ் சொசைட்டி சிவகங்கை மாவட்ட துணை சேர்மன் வி.சுந்தர ராமன் நிறைவு விழா உரையாற்றினார். சிவகங்கை மாவட்ட அமைப்பாளரும், பள்ளத்தூர் சீதா லட்சுமி ஆச்சி கலை, அறிவியல் கல்லூரி பொருளியல் துறை இணை பேராசிரியையும், முனைவர் டி.சித்ரா வாழ்த்துரை வழங்கினார். யூத் ரெட் கிராஸ் துணை ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான முனைவர் கே.கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!