Home செய்திகள் ஒரு பெண் தொடுத்த வழக்கில் பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவு..

ஒரு பெண் தொடுத்த வழக்கில் பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவு..

by ஆசிரியர்

ஒரு பெண் தொடுத்த வழக்கில் பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அப்பகுதியில் எப்போதும் திறக்க கூடாதென அதிரடி தீர்ப்பை நீதிமன்றம் கூறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நடராஜபுரம் சத்திரம் தெருவில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு அங்கன்வாடி பள்ளியும் நூறு மீட்டர் தூரத்தில் ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியும் அருகருகே நடராஜர் கோவில், துர்க்கை அம்மன் கோவில் மற்றும் குடியிருப்புகள் உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பை மீறி நீண்ட நாளாக ஒரு டாஸ்மாக் கடை அருகேஓடை புறம்போக்கில் பார் வைத்து  நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த துரைராஜேஸ்வரி மதுரை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உயர நீதிமன்றம் கடந்த வாரம் வக்கீல் ஜெகதீசன் தலைமையில் நிலக்கோட்டை தாசில்தார் நவநீதி கிருஷ்ணன் அடங்கிய குழு ஒன்றை அனுப்பி ஆய்வு செய்தனர். அதில் வழக்கு தொடுத்தவர் கூறியது யாவும் உண்மை என்று தெரிய வந்தது அதை தொடர்ந்து நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் உள்ளிட்ட பெஞ்ச் ஒரே மாதத்தில் தீர்ப்பு கூறினர். அதில் அந்த டாஸ்மாக் கடையை  உடனே மூட வேண்டும் என்றும் இனி எப்போதும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாதென்றும் கூறியிருந்தனர்.

தீர்ப்பு வெளியானவுடன் உடனடியாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இத்தீர்ப்பால் அப்பகுதியிலுள்ள அனைவரும் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com