வேலூரில் உள்ள சிப்பாய் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பாஜக தலைவர் .

வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை எதிரில் அமைக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சிதலைவர் அண்ணாமலை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் 75 -வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.பின்பு வேலூர் கோட்டை எதிரில் அமைக்கப்பட்டுள்ள சிப்பாய்நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.