உசிலம்பட்டி பூசந்தையில் 1கிலோ சென்டுபூ ரூ.10க்கு விற்பனையாவதால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அயன்மேட்டுப்பட்டி, பெருமாள்பட்டி, கல்லூத்து, போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சென்டுப்பூக்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் விவசாயிகள் சென்டுபூக்களை பறித்து உசிலம்பட்டி பூக்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் உசிலம்பட்டி பூக்கள் சந்தையில் கடந்த ஒருவாரமாக 1கிலோ சென்டுபூ 10ருபாய்க்கு விற்பனையாவதால் போதிய விலை கிடைக்கவில்லை என சென்டுபூ பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சென்டுபூ செடிகளுக்கு மருந்து தெளிப்பது, பூ பறிக்கும் செலவு, வாகன செலவு உள்ளிட்டவைகளுக்கு செலவழித்த முதலீடு பணம் கூட கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..