Home செய்திகள் உசிலம்பட்டி -வெளிமாநில இளைஞர் கரம் கொடுத்து காப்பாற்றிய காவல்துறையினர்

உசிலம்பட்டி -வெளிமாநில இளைஞர் கரம் கொடுத்து காப்பாற்றிய காவல்துறையினர்

by mohan

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால்  144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டில் முடங்கி உள்ளனர். ஏழை எளிய மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது இதில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு ரோட்டில் உள்ள உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வெளிமாநில இளைஞருக்கு கரம் கொடுத்து உதவிய சம்பவம் நடைபெற்றது .

வெளிமாநிலத்தில் இருந்து உசிலம்பட்டி பகுதிகளில் கூலித்தொழிலாளிகள்தள்ளுவண்டியில் பானிபூரி கடை – பிஸ்கட் விற்பனை என வெளியூரிலிருந்து வந்து வேலை பார்க்கின்றனர். இவர்கள் 144 தடை உத்தரவு வேலை இழந்துள்ள அன்றாட வாழ்க்கையை கழுவுவதும் கஷ்டமாக வந்த நிலையில் இதைப் பார்த்த உசிலம்பட்டி காவல்துறையினர் இவர்களுக்கு உதவ முன்வந்தனர் .இதன் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் சார்பாக துணைக் கண்காணிப்பாளர் ராஜா ஆணைக்கிணங்க  இன்ஸ்பெக்டர் சார்லஸ் அறிவுறுத்தலின்படி சார்பு ஆய்வாளர் சிவபாலன் தனது சொந்த செலவில் ஜார்காண்ட் மாநிலத்தை சேர்ந்தருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு உணவுப் பொருட்கள் மளிகைப் பொருட்கள் காய்கறிகள் வழங்கினார். உதவியாக தலைமை காவலர்கள் செல்வம் தமிழ்மணி உடனிருந்தனர். மேலும் மீதி உள்ள வெளி மாநிலத்தில்வந்தவர்களுக்கு இரண்டு தினத்தில் மீண்டும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும் என சார்பு ஆய்வாளர் சிவபாலன் தெரிவித்தார் .

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!