உசிலம்பட்டியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி சார்பில் கொசுமருந்து அடிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் அடுத்ததாக டெங்கு கொசு, ஏடிஎஸ் கொசு போன்ற கொசுக்களால் நோய் பரவுவதாக தகவல் பரவிவருகிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி கோட்டாட்சியர் ராஜ்குமார் உத்தரவுப்படி நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல் ஆலோசனையின் படி சுகாதார ஆய்வாளர்கள் அகமதுகபீர், சரவணபிரபு மேற்பார்வையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பேரையூர் ரோடு, தேனி ரோடு போன்ற பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் வாகனம் மூலம் கொசு மருந்து அடித்தனர்.

உசிலைசிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..