Home செய்திகள் குப்பை உறிஞ்சும் இயந்திரம்; திருச்சி மாணவர்கள் சாதனை..!

குப்பை உறிஞ்சும் இயந்திரம்; திருச்சி மாணவர்கள் சாதனை..!

by mohan

குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து, திருச்சி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இந்த இயந்திரத்தைக் கொண்டு, ஒரு நிமிடத்தில் 550 கன அடி குப்பைகளை அகற்றலாம்.திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இணைந்து, ‘புதிய கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு கிளப்’ என்ற அமைப்பை உருவாக்கி சில கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அமைப்பைச் சார்ந்த மாணவர்கள், 1983-ல் தங்கள் படிப்பை முடித்த மாணவர்களுடன் இணைந்து, சாலையோர குப்பைகளை அகற்றும் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கு முன்னர், சென்னை மாநகராட்சிக்கு சென்று அங்கு உள்ள குப்பை அகற்றும் இயந்திரத்தை பார்வையிட்டனர்.

அதன்பின்னர், என்.ஐ.டி-யின் முதல்வர் மினிஷாஜி தாமஸ், திருச்சி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பேராசிரியர்கள் வழிகாட்டுதலுடன் இந்த இயந்திரத்தை வடிவமைத்தனர். ஒரு லட்சம் ரூபாய் செலவில், ஓராண்டு கால உழைப்பில் வாக்வம் கிளீனர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை, திருச்சி மாநகராட்சிக்கு வழங்கினர்.

இந்த இயந்திரத்தைக் கொண்டு காய்ந்த இலைகள், பலவகை நெகிழிகள் மற்றும் இதர குப்பைகள் என, ஒரு நிமிடத்தில் 550 கன அடி குப்பைகளை அகற்றலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!