இராமநாதபுரம், ஜன.7 – தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் 18 பேர் உள்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 48 பேரை பணியிட மாற்றம் செய்து, 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி தங்கதுரை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி., யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை நகர் காவல் துணை ஆணையராக பணியாற்றி வரும் சந்தீஷ் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாகவும், ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும் பணியாற்றி, சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றி வரும். டிஐஜி என்.எம்.மயில்வாகணன் அமலாக்கத்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராமேஸ்வரம் உதவி எஸ்பியாக பணியாற்றி, சென்னை காவல் துணை ஆணையராக பணியாற்றி வரும் டாக்டர் தீபக் சிவாட்ச் விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஜெயஸ்ரீ, டாக்டர் சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, மல்லிகா, வெண்மதி, தேவராணி, உமா, ஜெயந்தி, ராதிகா, ஜெயகௌரி, மகேஸ்வரி, கீதா, திஷா மிட்டல், கிங்ஸ்லின், அனிதா, டாக்டர் புக்யா ஸ்நேக பிரியா, மெகலின் ஈடன் ஆகியோர் பெண் அதிகாரிகளாவர். சாமுண்டீஸ்வரி, முத்துசாமி, சசி மோகன், தீபக் சிவாட்ச், சுதாகர் சரவணகுமார், மூர்த்தி, விஜயகுமார், திருநாவுக்கரசு, பாக்ய ஸ்நேக பிரியா ஆகியோர் மருத்துவர்களாவர்.
You must be logged in to post a comment.