உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979ல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003ல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. 2006ல் ஐரோப்பா, 2007ல் தெற்காசியா, 2008ல் அமெரிக்கா, 2009ல் ஆப்பிரிக்கா.
சுற்றுலா செல்ல விரும்பாத மனிதர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். இன்று மனிதன் நிலாவுக்கும் சுற்றுலா செல்ல தயாராகிவிட்டான். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின் படி வழக்கமான இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு ஓய்வு அல்லது மற்ற ஏனைய நோக்கங்களுக்காக சென்று தங்கி வருவது சுற்றுலா என்று கூறப்படுகிறது. ஆனால், நமக்கு சுற்றுலா என்ற வார்த்தை வெறும் பயணம் என்ற சொல்லோடு மட்டும் முடிவு பெற்றுவிடாது. நண்பர்களோடு போனது, சின்ன வயதில் உறவினர்களோடு சென்ற சுற்றுலா என நம் வாழ்வின் ஏகப்பட்ட ஞாபகங்களும், சங்தோஷங்களும் நிறைய இருக்கும். சொல்லும்போதே பலருக்கும் சில நினைவுகள் வந்திருக்கும். சுற்றுலா தினத்தின் முக்கிய மேற்கோள், சுற்றுலா மூலம், பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்துதலும் மனித குலம் முழுவதும் அடிப்படைச் சுதந்தரத்தை அடைவது குறித்த அறிவுகளை பெறுவதும் தான்.
உலகில் உள்ள பல்வேறு நாடுகள் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை அங்கீகரித்து அறிவித்தது. அவ்வகையில் உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல வகைகளாகப் பிரிந்து வளர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய துறையாக விளைவது நம் சுற்றுலாதுறை தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து விளங்குகிறது சுற்றுலா துறை. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலா தான். 2010ன் கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கிறது
சுற்றுலா என்பதைத் வரைவிலக்கணப்படி நோக்கின் தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டுகளிக்க பயணிப்பதே என்று பொருள் கொள்ளலாம். போக்குவரத்தும் தொடர்புத்துறையும் மேம்பட்டுவரும் இக்காலத்தில் சுற்றுலா துறையும் மேற்குறிப்பிட்ட துறைகளுடன் இணைந்த வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக வசதிபடைத்த மேற்குநாட்டினரும், ஜப்பானியரும் அதிகமாக சுற்றுலா செல்கின்றனர் என்றும் சிறந்த சுற்றுலா இடங்கள் நல்ல வருவாயை ஈட்டித்தருகின்றன என்றும் புள்ளி விபரத்தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றது. நவீன காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரம் நாடு கடந்து வரும் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக வேண்டி பல்வேறு ஹோட்டல் தங்குமிட வசதிகள் உணவு, பாண வகைகள் இத்தியாதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இயற்கை வனப்பு, காடுகள், வனாந்திரம், வன ஜீவராசிகள், பறவைகள், கடற்கரைகள், சுண்ணக்கற்பாறைகள் (Corals), பளிங்குப் பாறைகள் (Crystala) மலைத்தொடர், நீர்வீழ்ச்சி, மாணிக்கம், தோட்டங்கள், பூஞ்சோலைகள், அழிபாடுகள் (Ruins) என்பன பிரதான சுற்றுலாச் சொத்துக்கள் ஆகும். Source By: Wikipedia, jayasrimahi. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
You must be logged in to post a comment.