Home செய்திகள் சுரபி அறக்கட்டளையின் அறிவகம் இலவச கல்வி உதவி மையத்தில், மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.!

சுரபி அறக்கட்டளையின் அறிவகம் இலவச கல்வி உதவி மையத்தில், மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.!

by Askar

சுரபி அறக்கட்டளையின் அறிவகம் இலவச கல்வி உதவி மையத்தில், மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.!

23/12/2019 திங்களன்று சுரபி அறக்கட்டளையின் அறிவகம் இலவச கல்வி உதவி மையத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் தாத்தா வேண்டும் என குழந்தைகள் கேட்டுக் கொண்டதன் பேரில்.. முத்தையாபுரத்தை சார்ந்த கிறிஸ்துமஸ் கீதம்(அஸெம்ப்ளி ஆஃப் காட்) குழுவினரின் கிறிஸ்துமஸ் கானங்கள், பொம்மலாட்டம், மற்றும் உண்மையான கிறிஸ்துமஸ் என்பது ஏழைகளுக்கு உதவுதலே என்பதை வலியுறுத்தும் நாடகம் ஆகியவற்றோடு பாடல் மற்றும் ஆடல் குதூகலத்தோடு.. குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இனிப்பு பெற்று மகிழ்ந்தனர்.

தலைமைக் காவலர் திரு. கணேசன் முத்தையா தலைமையேற்று குழந்தைகளுக்கு கேக் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

சுரபியின் மக்கள் தொடர்பு அதிகாரி திருமதி. சித்ரா செல்வி ஏற்பாடு செய்திருந்த விழாவில், பயிலகம் பெண்கள், அறிவகம் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஊர் மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுரபி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஹேமா முரளிதரன் (கவிதாயினி. செந்தாமரைக்கொடி) அன்பின் சிறப்பினை, ஒற்றுமையின் வலிமையை பண்டிகைகள் நமக்குக் கற்றுத் தருகின்றன என்று பேசினார்..

கிறிஸ்துமஸ், புதுவருட மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளும் நன்றியும் கூறிட விழா இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!