Home செய்திகள் விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்வதை கண்டித்து தென்காசி மாவட்டம் முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்…

விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்வதை கண்டித்து தென்காசி மாவட்டம் முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்…

by Askar

விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்வதை கண்டித்து தென்காசி மாவட்டம் முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கு துடியாய் துடிக்கும் மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமாக அறிவுறுத்தியதின் பேரில்..

தென்காசி மாவட்டம் முழுவதும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சமூக விலகலுகலுடன் 4 நபர்கள் மட்டும் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

சுரண்டையில் அண்ணா சிலை, சார் பதிவாளர் அலுவலகம், பொட்டல் மாடசாமி கோவில் திடல், மற்றும் காமராஜர் வணிக வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு. மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனிநாடார் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் முன்னிலை வகித்தார், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில பொதுச்செயலாளர் சிங்கராஜ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் எஸ்ஆர் பால்துரை, மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் விஏ சமுத்திரம், நகர வர்த்தக காங்கிரஸ் தலைவர் சமுத்திரம், வட்டார காங்கிரஸ் செயலாளர் தேவேந்திரன், நகர செயலாளர் டயர் செல்வம் , 17 வார்டு செயலாளர் காந்தி நகர காங்கிரஸ் செயலாளர் மோகன், முன்னாள் கவுன்சிலர் .மணிகண்டன் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு மத்திய மாநில அரசை கண்டிக்கும் விதமாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்ட முடிவில் நகர இலக்கிய அணி அணி தலைவர் கந்தையா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் பழனிநாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்தனர். தொடர்ந்து கடையாலுருட்டியில் மேலநீலீதநல்லூர் வட்டார தலைவர் முருகையா தலைமையிலும் சாம்பவர்வடகரையில் செங்கோட்டை கிழக்கு வட்டார தலைவர் ரத்தினம் மற்றும் நகர தலைவர் முருகன் தலைமையிலும்,. வீராணத்தில் ஆலங்குளம் வடக்கு வட்டார தலைவர் முஸ்தபா தலைமையில் முருகையா, மரியதாஸ், சங்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!