Home செய்திகள் தேனியிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 180 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..!

தேனியிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 180 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..!

by Askar

தேனியிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 180 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 180 பேர் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இவர்கள் அனைவரும் வேலையை இழந்து மட்டுமன்றி தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வந்தனர். தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் இவர்கள் அனைவரையும் தேனி மாவட்டத்திலுள்ள தேனி, போடி, கடமலை, ஆண்டிபட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிவாரணமுகாம்கள் அமைத்து, அந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 180 பேரும் இன்று மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவிபல்தேவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி முன்னிலையில் சிறப்பு அரசுப்பேருந்துகள் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குடிநீர், பிஸ்கட், பழங்கள், கொடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அவர்களை வழியனுப்பி வைத்தனர். இங்கிருந்து மதுரை ரயில் நிலையம் செல்லும் அவர்கள் மாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மூலமாக உத்தரபிரதேசம் சென்றடைய உள்ளனர்.

Aசாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!