சாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டத்தில் சாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஜுலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் ஆண்டிபட்டியில் முருகன் தியேட்டர் அருகில் ஒன்றிய செயலாளர் .அந்தோணி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை AITUCயின் மாவட்ட பொருளாளர் தோழர் தி.சென்றாயபெருமாள், மாவட்ட செயலாளர் இரா.தமிழ் பெருமாள், பெரியகுளம் நகர செயலாளர் க.ரமேஷ், மற்றும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்கத்தின் ஆண்டிபட்டி தாலுகா தலைவர் சி.பிரவேந்திரன் உள்ளிட்ட ஆண்டிபட்டி நெசவாளர் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காவல்துறையினரின் அத்துமீறல்களுக்கு எதிராக முழக்கமிட்டு , சாத்தான்குளத்தில் வியாபாரிகளை படுகொலை செய்த காவல்துறையினரை கைது செய்வதோடு பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைசெய்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் . கொலை தொடர்பான ஆவணங்களை அழிக்கும், நீதி விசாரணையைத் தடுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோத செயல்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்டந்தோறும் சுயேச்சையான விசாரணை அமைப்பை (PCA) உருவாக்க வேண்டும் . சாத்தான்குளம் மாஜிஸ்திரேட், அரசு மருத்துவர், கோவில்பட்டி சிறை அதிகாரி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி ஒருவரை கைது செய்யுபோம்போது, காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய 11 கட்டளைகளை கடைபிடிக்க உறுதி செய்யவும் ,காவல்துறை நண்பர்கள்” (Friends of police) என்ற சட்டவிரோத அமைப்பினை கலைத்திடவும் , சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலை மனசாட்சியோடு வாக்குமூலம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்குவதோடு காவலர் ரேவதிக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

 சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..