
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் வாங்க வேண்டும் எனவும் மின் திருத்த சட்டத்தை திரும்ப பெறு, விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே, கொரோனா காலம் முடியும் வரை மின் கட்டணத்தை ரத்து செய்யுவும் ,இஎம்ஐ உள்ளிட்ட நுண் நிதி கடன்களை முழுவதும் ரத்து செய்திட வேண்டும்.சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி வேண்டும், ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் சௌந்திரபாண்டியன் , பெரியகுளம் தாலுகா தலைவர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் மதன்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் மத்திய மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோசங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர்
சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.