Home செய்திகள் தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..

தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..

by Abubakker Sithik

தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கடையநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் நெல்லை ராணி அண்ணா கல்லூரியை போன்ற மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன் என தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி அளித்தார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில், தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம், நகரச் செயலாளர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கடையநல்லூர் ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதியில் பிரசாரம் செய்தார்.

புன்னையாபுரம் பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், சிங்கிலி பட்டி, சொக்கம்பட்டி, திரிகூடபுரம், முத்துச்சாமிபுரம், குமந்தபுரம், கடையநல்லூர் நகராட்சி பகுதி ,கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், மெயின் பஜார், பேட்டை, ரஹ்மானியாபுரம், மேலக் கடையநல்லூர், அதனைத் தொடர்ந்து ஒன்றிய பகுதிகளான காசி தர்மம், இடைகால், கண்மணியாபுரம், வலசை, புதுக்குடி, மங்களாபுரம், வேலாயுதபுரம், ஊர்மேல் அழகியான், கள்ளம்புளி அச்சம்பட்டி, இடைகால், நயினாரகரம், சின்னத்தம்பி நாடாரூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது வழி நெடுகிலும் தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் மற்றும் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகிய இருவருக்கும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் நகர்மன்ற உறுப்பினருமான ஆர் முருகன் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். மாவடிக்கால் பகுதியில் பெண்கள் வீட்டின் மேல் மாடிகளில் இருந்து வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

கடையநல்லூர் நகர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது, தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராக இருந்த காலஞ்சென்ற மரியாதைக்குரிய அருணாசலம் அவர்களுக்கு பிறகு இதுவரை இந்த தொகுதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்ததில்லை. முதல் முறையாக இந்த தொகுதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனவே புதிதாக தொடங்கப்பட்ட இந்த மாவட்டத்திற்கு தேவையான பொறியியல் கல்லூரி, அரசு பெண்கள் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை தொடங்குவதற்கு பாடுபடுவேன். மேலும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு உயிரிழப்பு மற்றும் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்களை விரைவாக தொடர்பு கொள்ள கடையநல்லூரில் வெளியுறவுத்துறை சார்பில் தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்துவேன். திருநெல்வேலியில் செயல்படுவது போல் பாஸ்போர்ட் சேவா கேந்திரா, பாஸ்போர்ட் சேவை மையத்தை தென்காசியில் அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இப்பகுதியில் ஏராளமான தென்னை மற்றும் எலுமிச்சை சார்ந்த விவசாய நிலங்கள் உள்ளது. தென்னை மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவற்றிற்கு மதிப்பு கூட்டும் தொழிற்சாலை உருவாக்கப்படும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கப்படும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் வராமல் இருப்பதற்கு நவீன முறையில் ஸ்ப்ரிங் டைப் சோலார் மின் வேலி அமைத்துக் கொடுக்கப்படும் மற்றும் யானைபுகா அகழி தோண்டப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை பாதுகாப்பாக வைத்திருக்க குளிர் பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செங்கோட்டை விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பணிகளுக்கு மாணவ மாணவிகளை தயார்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் கோச்சிங் சென்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்த போது கடையநல்லூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும் மக்கள் மருத்துவருமான டாக்டர் சஞ்சீவி, நகர திமுக அவைத் தலைவர் முருகையா, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், துணைத் தலைவர் ராஜையா, மாவட்ட பிரதிநிதிகள் தம்புராஜ், சிட்டி திவான் மைதீன், ராமச்சந்திரன், நகர பொருளாளர் நெடுமாறன், மாவட்ட பிரதிநிதி தம்பு, புளியங்குடி பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச. செயலாளர் ஷார்ப் கணேசன், துணைச் செயலாளர் காசி நல்லையா, இளைஞரணி இத்தாலியின் பீர்முகம்மது (எ) பீரப்பா, ஒன்றிய குழு துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், கடையநல்லூர் வார்டு செயலாளர்கள் நகர கழகம் மற்றும் வார்டு கழக பிரதிநிதிகள் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூ இ.கம்யூ, ம.தி.மு.க, மனித நேய மக்கள் கட்சி, ஆதி தமிழர் பேரவை மாவட்ட மற்றும் நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!