Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு..

தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024. ஐ முன்னிட்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பணிபுரிய உள்ள 1820 தலைமை வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Presiding officer), 1820 முதல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 1), 1820 இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 2), 1820 மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 3), 190 நான்காம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer-4) வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 07.04.2024 அன்று 37-தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரியிலும், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு பி.ஏ. சின்னராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும்,

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரியிலும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு தென்காசி எம்.கே.வி.கே மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!