Home செய்திகள் பென்னாகரம் அருகே அரகாசன அள்ளியில் ஐகோர்ட் உத்தரவின்படி மாரியம்மன் திருவிழா…

பென்னாகரம் அருகே அரகாசன அள்ளியில் ஐகோர்ட் உத்தரவின்படி மாரியம்மன் திருவிழா…

by ஆசிரியர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசன அள்ளியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சாமி வழிப்படுவதில் இரு தரப்பினரிடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது. இதனையெடுத்து அப்போது இருந்த மாவட்ட கலெக்டர் 144தடை உத்தரவு பிறப்பித்தார். பிறகு இருதரப்பும் ஐ கோர்ட்டை நாடினர். பிறகு ஒரு தரப்பினருக்கு உழவர் திருநாள் அன்று காலை 6மணி முதல் மதியம் 12மணி அளவில் வரை மற்றொரு தரப்பினருக்கு மதியம் 2மணி முதல் இரவு 8மணி வரை திருவிழாவை நடத்தலாம் என ஐகோர்ட் உத்தரவுயிட்டது.மேலும் மாவட்ட சார் ஆட்சியர் சிவன்அருள் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியபிறகு திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் அனுமதி வழங்கிய பிறகு இருதரப்பினரும் தனி தனியாக பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து சக்கிஅழைத்து கரகம் எடுத்தும் மாறுவேடங்களில் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஐகோர்ட் உத்தரவின்படி பென்னாகரம் தாசில்தார் பிரசன்ன மூர்த்தி மற்றும் அரக்காசன அள்ளி விஎஒ சுகுமார் நேரத்தை கண்காணித்து திருவிழாவை நடத்த அனுமதித்தனர்.

மேலும் பென்னாகரம் துணை தாசில்தார் சிவக்குமார் பெரும்பாலை ஆர் ஐ முல்லைக்கொடி கலப்பம்பாடி விஎஒ அசோகன் பெரும்பாலை விஎஒ ஜெய்கர் சின்னம்பள்ளி விஎஒ வெங்கடாசலம் கெண்டையனள்ளி விஎஒ குமரேசன் மற்றும் பாதுகாப்பு பணியில் ஏரியூர் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் பென்னாகரம் மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி பெரும்பாலை உதவி காவல் ஆய்வாளர் மாரி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தர்மபுரி செய்தியாளர். என். ஸ்ரீதரன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!