
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி 25ம் ஆண்டு விழா 06-04-2017 அன்று சிறப்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு மாணவி ரஷீதத் நலீஃபா கிராத்துடன் தொடங்கியது. கல்லூரியின் முதல்வர்.சுமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர்.நாதிரா பானு கமால் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மலேசிய அரசின் தென்னிந்திய தூதரக அதிகாரி அஹ்மத் பஸாரஜாம் பின் அப்துல் ஜலீல் மற்றும் அவரது துணைவியார் சித்தி நூர் மவர் பின்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஃபாத்திமா ஃபசிஹா என்ற இளநிலை மாணவிக்கும், கதீஜத்தும் நூரியா என்ற முதுநிலை மாணவிக்கும் இந்தாண்டிற்காண சிறந்த மாணவிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சி உளவியல்துறை மாணவி முஃபின் கல்ஃபா நன்றியுரையுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் சீதக்காதி அறக்கட்டளையின் சேக் தாவுது கான், துறை பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
You must be logged in to post a comment.