அதிமுக ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் உடனடியாக பேனர்களை அகற்ற சொன்ன போலீசார்; அதிமுகவினர் அதிருப்தி..
மதுரை மாவட்டம், சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து ,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சோழவந்தான் பேருந்து நிலைய வளாகத்திற்குள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கி 11:30 மணி அளவில் நடைபெற்று முடிந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், அங்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் அதிமுகவினர் வைத்திருந்த பேனர்களை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டனர். இதனால், கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் அங்கு வைக்கப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட பேனர்களை உடனடியாக கழட்டி எடுத்து சென்றனர். திமுக கூட்டம் நடைபெறும் போது இரண்டு நாட்கள் முன்பாகவும் கூட்டம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்தும் பேனர்களை கழட்டாமல் அனுமதி அளிக்கும் காவல்துறை, அதிமுகவிற்கு மட்டும் கூட்டம் நடந்து முடிந்த உடனே பேனர்களை அகற்ற சொன்னது அங்கிருந்த அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. இது குறித்து, அங்கிருந்து அதிமுகவினர் கூறும் போது: காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் ஏற்கனவே, பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டும் பேருந்து நிலைய வளாகத்திற்கு நடத்துவதற்கு அனுமதி அளித்திருந்தது. அதிலும் ,கூட்டம் முடிந்த உடனே பேனர்கள் அனைத்தையும் அகற்ற சொன்னது கட்சியினரிடையே அதற்ப்தியை உருவாக்கியுள்ளது இனிவரும் காலங்களிலாவது, காவல் துறையினர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.