முக கவசம் உங்கள் உயிர்க்கவசம் சமூக விலகல் ஆபத்திலிருந்து விலக்கிவைக்கும்! – கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடர் விழிப்புணர்வு.

நாடு முழுவதும் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பலபேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. பலரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொகுதி மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து கூறியதாவது இந்த கொரோனா கிருமி யுத்தம் உலக யுத்தத்தை விட கொடுமையானது. மக்களை காக்க போராடும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர், தமிழ்நாட்டு மக்களுக்காக போராடி வருகிறார்கள் அரசின் வேண்டுகோளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். “முக கவசம் உங்கள் உயிர்க்கவசம்”. “சமூக விலகல் உங்களை ஆபத்திலிருந்து விலக்கிவைக்கும்” என்ற உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும். வெளியூர்களிலிருந்து வரும் நபர்கள் நாம் கண்டறியப்பட்டால் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். சிலர் நேரடியாக வீட்டிற்கு செல்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றது. பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார்.

செங்கம் செய்தியாளர், சரவணகுமார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..