Home செய்திகள் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேசுவேன்;டியுஜெ பேரவைக்கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ தூசி மோகன் உறுதி

வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேசுவேன்;டியுஜெ பேரவைக்கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ தூசி மோகன் உறுதி

by mohan

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்ணலிஸ்ட் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் செய்யாறு வேணுகோபால் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் வந்தவாசி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் போளூர் சுரேஷ், மாநில பொதுச் செயலாளர் முத்து, மாநில அமைப்புச் செயலாளர்கள் பி ஆர் சுப்பிரமணி,தமிழ்ச்செல்வன், மாநில துணைப் பொதுச் செயலாளர் வளையாபதி, மாநில இணைச் செயலாளர்கள் மணிவாசகம், சாகுல்ஹமீது,தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் ஜி கே ஸ்டாலின்,சேது,விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர் தனஞ்செயன், மாவட்ட பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சாலமன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்ணலிஸ்ட்ஸ் ன் மாநிலத் தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் மற்றும் செய்யாறு சட்டமன்ற தொகுதி தூசி மோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கினர். தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்ணலிஸ்ட்ஸ் மாநில தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்று பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், பத்திரிக்கையாளர்கள் நிலை குறித்தும், தற்சமயம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை சூழல் குறித்தும், அவர்களின் நிலையை போக்க பத்திரிகைகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் இருப்பதாகவும் அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பின்னர் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் பேசுகையில், பத்திரிக்கையாளர்களின் நிலை குறித்து நன்கு அறிந்து இருப்பதாகவும், திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர்கள் அத்தனை பேரின் நிலைமையை நான் நன்றாகவே அறிவேன். தங்களது கோரிக்கைகளை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கண்டிப்பாக பதிவு செய்வேன் என்று உறுதி அளித்தார். மேலும் திருவண்ணாமலை மாவட்ட சங்க வளர்ச்சிக்கு தான் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக மேடையில் அறிவித்தார். புதிய நிர்வாகிகளாக மாவட்டஇணைச் செயலாளர்களாக ஆரணி ஜி செந்தில்குமார், வேட்டவலம் டி சிவசங்கரன் ஆகியோரும், மாவட்ட செயற்குழு உறுப்பினராக வேட்டவலம் முத்துகிருஷ்ணன்,வேட்டவலம் தாலுக்கா ஒருங்கிணைப்பாளராக சாமிநாதனும் தேர்வு செய்யப்பட்டனர் கூட்டத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டு இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனை தற்போது திருவண்ணாமலை செய்யாறு ஆரணி தண்டராம்பட்டு பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதி பத்திரிக்கையாளர்கள் அனைவருக்குமே இலவச வீட்டுமனை பெற மாவட்ட ஆட்சியரை சந்தித்து முயற்சிகள் மேற்கொள்வது, 2021 ஆம் ஆண்டிற்கான தனியார் பேருந்து இலவச பயண அட்டையை உரிய நேரத்தில் பெற்று தருவது,கொரானா காலத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு உதவி செய்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில்*வேலூர் மாவட்ட தலைவர் இந்திரகுமார், செயலாளர் இளஞ்செழியன், பொருளாளர் ரகு, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் புருஷோத்தமன், செயலாளர் பல்த்தசார், பொருளாளர் புகழேந்தி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முருகேசன்,திருச்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் கண்ணா, மற்றும் சிறப்பு அழைப்பாளர் பாலு திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், சிறப்பு அழைப்பாளராக ரவி, மாவட்ட துணைத்தலைவர்கள் சேத்துப்பட்டு பாபு, செய்யாறு வேணுகோபால், துணை செயலாளர் ஆரணி விஜயகுமார், மாநில இணைச் செயலாளர்கள் கீழ்பெண்ணாத்தூர் சேகர் ,ஆரணி பாண்டியன் ,மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் சேகர் லிங்கப்பன், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் சேது, விஜயபாஸ்கர், மக்கள் தொடர்பு நிர்வாகி ஏழுமலை ஆகியோரும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்போளூர் கே பார்த்தசாரதி, செங்கம் கே ராஜா, ஆரணி கே கௌரிசங்கர், ஆரணி ஆர் சுரேஷுராஜா, செய்யார் ஆர் புருஷோத்தமன், வந்தவாசி ஏ எம் காஜாஷெரிப், சேத்துப்பட்டு பி பிரேம்குமார், கலசப்பாக்கம் வி சரவணன், கீழ்பென்னாத்தூர் கே ரவிச்சந்திரன், தண்டராம்பட்டு வி வேல்முருகன், வெம்பாக்கம் இ இணையதுல்லா, கண்ணமங்கலம் வி செந்தமிழ்செல்வன், வேட்டவலம் ஆர் முத்துகிருஷ்ணன் ஆகியோரும், தாலுக்கா ஒருங்கிணைப்பாளர்கள் ஆரணி ஜி நந்தகுமார், செய்யார் கே ஷண்முகம், சேத்துப்பட்டு வி சேகர், வந்தவாசி கே அருள், ண்ணமங்கலம் கே எம் சாந்தசீலன், கீழ்பென்னாத்தூர் என் கதிரவன், தண்டராம்பட்டு ஏ செலவராஜ் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக காலையில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமினை மாநிலத்தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் தொடங்கி வைத்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!