மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கொரனோ பெயரைச் சொல்லி நாட்டை நாசப்படுத்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக செங்கம் தாலுக்காவில் சுமார் 40 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம் மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, அந்தனூர் பக்கிரிப்பாளையம் , மேல்புழுதியூர், புதிய பேருந்து நிலையம் டீ கடை அருகில் , பழைய பேருந்து நிலையம், செங்கம் கிராமநிர்வாக அலுவலகம் முன்பு, வளையாம்பட்டு, சென்னசமுத்திரம், பரமனந்தல், குப்பனத்தம், பழைய குயிலம், புதுப்பாளையம் சந்தை மைதானம், புதுப்பாளையம் Dr BRஅம்பேத்கர் சிலை அருகில், புதுப்பாளையம் எம்ஜிஆர் சிலை அருகில், தொரப்பாடி, சாத்தனூர், அரியாகுஞ்சூர்.ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.சிஐடியூ சங்கத்தின் சார்பாக சிடிஎஸ் லாட்ஜ் அருகில், புதிய பேருந்து நிலையம் Dr BRஅம்பேத்கர் சிலை அருகில், பத்திர பதிவு அலுவலகம் முன்பு, போளூர் ரோடு அரசமரம் அருகில், மின்வாரிய அலுவலகம் முன்பு, பேரூராட்சி அலுவலகம் முன்பு, குப்பனத்தம் கூட்டுச்சாலை அருகில்,அரியாகுஞ்சூர், இறையூர் இந்தியன் வங்கி முன்பு, இறையூர் பேருந்து நிறுத்தம், மேல்பென்னாத்தூர், விண்ணவனூர், சாத்தனூர். ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது தொமுசா சார்பில் நிப்பத்துறை, அந்தனூர், செங்கம்பணிமனை முன்பு, அம்மாபாளையம், மேல்செங்கம், அரட்டவாடி, ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது மேலும் ஏஐடியுசி ,சிஐடியூ தொமுச சங்கங்கள் இணைந்து புதிய பேருந்து நிலையம் வாயில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..