Home செய்திகள் ஆலங்குளத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் அங்கன்வாடி கட்டிடம்.. பெற்றோர்கள் தர்ணா..

ஆலங்குளத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் அங்கன்வாடி கட்டிடம்.. பெற்றோர்கள் தர்ணா..

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி, 9வதுவார்டு அண்ணாநகர் 2வதுதெரு, இங்குள்ள அங்கன்வாடி மையம் சுமார்  வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது, இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், இந்த கட்டிடம் தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

மேலும் மழைக்காலங்களில் வெள்ளநீர் உள்ளே வரும் நிலையும் உள்ளது. எனவே குழந்தைகளின் நலன் கருதி இந்த மையத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு  தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது நலன் கருதி மக்கள் நலன் காக்கும் இயக்கம் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதே போல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி அங்கன்வாடி படிக்கும் குழந்தையுடன் தந்தை தர்ணா போராட்டம் நடத்தினார். விழுப்புரம் மாவட்டம் கெடிலம் அடுத்த பெரும் பட்டு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தனது மகள் காயத்ரி தனது ஊரில் உள்ள அங்கன்வாடிக்கு பள்ளிக்குச் சென்றிருந்தார்.

அப்போது பள்ளியில் இருந்த மூங்கில் படல் குச்சி குத்தி பார்வை பாதிப்படைந்தது. இதுகுறித்து மேல் சிகிச்சைக்கு உதவி கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி 04.03.19 திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தனது குழந்தையோடு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!