சாலையில் கொட்டப்படும் மணல் – தொடரும் அவலம்..

கீழக்கரையில் கட்டுமானப் பணிகளுக்காக மணல் கொட்டப்படும் அவலம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்று (09-07-2017) காலை வள்ளல் சீதக்காதி சாலையில் கொட்டப்பட்டிருந்த மணலால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

அது சம்பந்தமாக நம் கீழை நியூஸ் இணையதளத்திலும் பல முறை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு இருந்தது கவனிக்கதக்கது. இப்பிரச்சினையில் கடுமையான நடவடிக்கை எடுக்காத வரை இப்பிரச்சினை தீர்வுக்கு வராது.

அலட்சியப்படுத்தும் கட்டிட காண்ட்ராக்டர்கள்… மெத்தனப் போக்கில் கீழக்கரை நகராட்சி…