Home செய்திகள் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் கண்மாய் புனரமைப்பு பணிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் கண்மாய் புனரமைப்பு பணிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் ஆய்வு

by mohan

தமிழ்நாடு முதல் வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆனந்தூர் கண்மாய் ரூ.69 லட்சம் மதிப்பிலும், ஆய்ங்குடி கண்மாய் ரூ.65.75 லட்சம் மதிப்பிலும், ஓடக்கரை கண்மாய் ரூ.45 லட்சம் மதிப்பிலும், சாத்தனூர் கண்மாய் ரூ.57 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் ஆயக்கட்டு விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இப்புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில்,குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவேண்டும். கண்மாய் புனரமைப்பு பணிகளை விரைவாக, தரமாக நிறைவேற்றவேண்டும். கண்மாய் கரையை பலப்படுத்தி கரையோரங்களில் அதிகளவில் பலன் தரும் மரக்கன்றுகளை நட வேண்டும். குடிமராமத்து பணியை சிறப்பாக செயல்படுத்தும் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2ஆம் மற்றும் 3ஆம் பரிசாக தலா ரூ.5 லட்சம் வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது என்றார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்வெங்கிடகிருஷ்ணன்,உதவி செயற்பொறியாளர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!