மிரட்டலுக்கு பணிய போவதில்லை-பத்திரிக்கையாளர் ரோகிணி

சில தினங்களுக்கு முன்பாக தி வயர் (The wire) இணையத்தில் கோல்டன் டச் ஆஃப் ஜே ஷா (Golden Touch of Jay Shah) என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் ரோகிணி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த  செய்தி நாட்டில் புயலை கிளப்பியதோடு  பாஜக மீது  கடும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.

அமிட்ஷா வின் மகன் நடத்தி வரும் நிறுவனத்தில் 2014- 2015 ல் 50 ஆயிரம் வருவாயில் இருந்து 2015-2016 ல் 80.5 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு அந்த ஒரே வருடத்தில் அந்நிருவனம் அசுர வளர்ச்சி அடைந்ததை கண்ட தொழில் வல்லுனர்கள் பிரமிப்பு அடைந்தனர். அதே சமயத்தில் சாமாணிய மக்கள் மத்தியில் பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

இந்நிலையில் செய்தியை வெளியீடு செய்த பத்திரிக்கையாளர் ரோகணி மீது 100 கோடி கேட்டு மான நஷ்ட  வழக்கு  தொடர போவதாக   மிரட்டல் வந்ததை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துள்ள பா.ஜ.க, பத்திரிகையாளர்களை மிரட்டலாம், துன்புறுத்தலாம், அதன்மூலம் உண்மையை மறைத்து விடலாம் என்று நினைத்தால் அது முடியாது என்று ரோஹிணி சிங் கூறியுள்ளார். இது போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் சில பத்திரிக்கையாளர்கள் தங்கள் நிலைபாட்டில் இருந்து விலகப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே எழுத்தாளர் ரோஹிணி சிங் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகன், ராபர்ட் வதோரா நடைமுறைக்கு  புறமாக சொத்து வைத்துள்ளார் என்று வெளியிட்ட பொழுது பா.ஜ.கவினர் துள்ளி குதித்ததை யாரும் மறந்துவிட முடியாது.