Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத டாக்டர்களுக்கு நோட்டிஸ்..

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத டாக்டர்களுக்கு நோட்டிஸ்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று (18.6.2020) திடீர் ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பிரிவு சென்ற ஆட்சியர் அங்கு டாக்டர் பணியில் இல்லாதது குறித்து கேட்டறிந்தார். புறநோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை அறை உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டார்.

அப்பகுதிகளில் சமூக இடைவெளி இல்லாமல் புறநோயாளிகள் இருப்பதை சரி செய்ய , மருத்துவமனை ஊழியர்களிடம் அறிவுறுத்தினார். வைரஸ் தொற்று கண்டறியும் நவீன ஆய்வகம் சென்ற ஆட்சியர் வீரராகவ ராவ், அங்கு போதிய முகக்கவசம், கையுறை, தலைக்கவசம் இருப்பு குறித்து கேட்டறிந்தார். டாக்டர்கள், நர்ஸ்கள் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தார். அப்போது 9 டாக்டர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராதது தெரிய வந்தது. அவர்கள் அனைவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

ஆட்சியர் கூறுகையில், கொரானா பாதிப்புக்கு  மாவட்ட அரசு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்க ஏற்கனவே இருந்த 150 படுக்கை வசதி, தற்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் மாவட்டத்தில் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ளது. டாக்டர்கள், நர்ஸ்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினாலும் கூட, உரிய நேரத்திற்கு பணிக்கு வராத டாக்டர்கள் 9 பேரிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!