கீழக்கரையில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் புழக்கம் மற்றும் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க வீரகுல தமிழ்படை இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்..

இன்று (10/10/2020) வீரகுல தமிழர் படை இயக்கத்தின் கீழக்கரை நகர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழக்கரை நகரில் போதை பழக்கங்கங்களும், சட்டவிரோத மது விற்பனையும் அதிகரித்து வருகிறது. நகரின் பேருந்து நிலையம், கீழக்கரை மார்க்கெட், போன்ற பகுதிகளில் சர்வ சாதாரணமாக சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் பெண்களும் பொதுமக்களும் அப்பகுதியை கடந்துசெல்ல அச்சப்படுகின்றனர் எனவே சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைகளை தடுத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றபட்டது.

மேலும் நகரில் சுகாதார சீர்கேடு மிக மோசமாக உள்ளது. சுகாதார நடவடிக்கைகளில் மெத்தனமாக நடந்துவரும் கீழக்கரை நகராட்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பழனிமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழக்கரை நகர் செயலாளர் பாலமுருகன் மற்றும் நகர் பொறுப்பாளர்கள் அஜித்குமார், ராஜா, விக்ரம், கவுதமன், சரத்குமார், மது கணேஷ், கோபி, பிரபு, ரஞ்சித், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..