Home செய்திகள் ராமநாதபுரத்தில் நாளை குழந்தை பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வு

ராமநாதபுரத்தில் நாளை குழந்தை பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வு

by mohan

ராமநாதபுரத்தில் நாளை (21.6.19) தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான சிறப்பு அமர்வு குழந்தை பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் முன்னிலையில் இன்று (20.6.2019) ராமநாதபுரத்தில் நாளை 21.6.2019 நடைபெறும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான சிறப்பு அமர்வு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் உறுப்பினர் மீரா சங்கர் உடனிருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் கூறியதாவது: மத்திய,மாநில அரசுகள் ஒருங்கிணைந்து குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தி அவர்களின் பாதுகாப்பைஉறுதிசெய்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நிதி ஆயோக் வழிகாட்டுதலின்படி இந்திய அளவில் 727 மாவட்டங்களை தேர்வு செய்து 51 இடங்களில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான சிறப்பு அமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி இந்திய அளவில் முதன்முதலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இச்சிறப்பு அமர்வு நாளை (21.6.2019) நடைபெறவுள்ளது. இச்சிறப்பு அமர்வில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் தலைவர் பிரியாங்க் கனூங்கு, தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத் தலைவர் என்.பி.நிர்மலா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை ,சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள், பெற்றோர்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.குழந்தைகளின் உரிமை மீறல், குழந்தை பாதுகாப்பு, கல்வி இடைநிற்றல், உடல், உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளான குழந்தைகள், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீட்டுத் தொகை பெறுதல்போன்ற குழந்தைகளின் உரிமை மீறல் தொடர்பான புகார் தெரிவிக்கலாம். இச்சிறப்பு அமர்வில் பெறப்படும் .மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும்.

தமிழகத்தில் கடந்த 3 மாத காலத்தில் ஊடகம்,சமூக ஊடகங்கள் வாயிலாக பெறப்பட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில்தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம்தாமாக முன்வந்து குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக இதுவரை 83 புகார்களை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் 39 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து குழந்தை பாதுகாப்பு தொடர்பாக 235 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 189 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குழந்தை திருமணங்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 54 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், குழந்தைகளின் உரிமை பாதுகாப்பது தொடர்பான இச்சிறப்பு அமர்வானது இந்திய அளவில் முதன்முறையாக இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு அமர்வு மேற்குறிப்பிட்ட 10 மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள், குழந்தைகளின் பெற்றோர்கள், தன்னார்வலர்கள் தவறாமல் கலந்து கொண்டு குழந்தை பாதுகாப்பு தொடர்பான தங்களது புகார்களை மனுக்களாக சமர்ப்பித்து தீர்வு காணலாம் என்றார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.துரைமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தகோ.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!