
ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் பயிற்சி மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ் தேசியக்கொடி ஏற்றினார். தேசிய ஒருமைப்பாடு, அமைதியை வலியுறுத்தும் நோக்கில் மூவர்ண பலூன்கள், புறாக்களை பறக்க விட்டார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வருவாய், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 78 பயனாளிகளுக்கு ரூ. 23.24 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கொரானா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜனார்த்தனன் , மாலதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாரீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி,, அண்ணா துரை, ரமேஷ் பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், திருமுருகன் மற்றும் இதர துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் 82 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி, ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத்தலைவர், மயில்வாகனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன் உள்பட பலர் பங்கேற்றனர். மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி தேசியக்கொடி ஏற்றினார்.
You must be logged in to post a comment.