ராமநாதபுரம் அருகே மீனவர் குடிசை எரிந்து தரை மட்டம்

இராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசையைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் அர்ச்சுணன். அதிமுக., மேலமைப்பு பிரதிநிதியான இவர் கட்டடத் தொழில் செய்து வந்தார். கொரானா பரவல் காரணமாக வேலை இன்றி வாழ்வாதாரம் பாதித்துள்ள இவர் தற்காலிமாக மீன் வியாபாரம் செய்து வருகிறார். இன்று (17.7.2020) அதிகாலை அவர் வியாபாரத்திற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அவரது குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.1.20 ரொக்கம், ரேஷன் கார்டு, துணிமணி உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகி வீடு தரை மட்டமானது. விபத்திற்கான காரணம் குறித்து வருவாய், காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..