Home செய்திகள் ராமநாதபுரத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி சுரேஷ் அகாடமியின் 3 ஆம் ஆண்டு விழா

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி சுரேஷ் அகாடமியின் 3 ஆம் ஆண்டு விழா

by mohan

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்ட தலைநகரங்களில் சுரேஷ் அகாடமி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நகர், கிராமப் புறங்களில் இருந்து கல்வி அறிவு பெற்ற ஏழை , நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் அரசு உயர் பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை அடைய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. போட்டி தேர்விற்காக பல ஆயிரம் செலவிட்டு, பல மைல் தூரம் பயணித்து முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையை எளிதாக்கி கற்றோரின் இருப்பிடத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைத்து சுரேஷ் அகாடமி கடந்த 3 ஆண்டுகளாக மகத்தான பணி ஆற்றி பலரின் அரசு பணி கனவை நனவாக்கி உள்ளது. சிறந்த பயிற்றுநர்கள், வல்லுநர்கள் மூலம் போட்டித் தேர்வுகளை எளிதாக்கி வெற்றி கண்ட சுரேஷ் அகாடமியின் 3 ஆம் ஆண்டு விழா செப்.2 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி சுரேஷ் அகாடமி வித்யா சுகேஷ் குத்து விளக்கேற்றுகிறார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்லி லீமா அமலின் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். ஊட்டி காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் பி.கனி முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் (தடவியல்) ஏ.யூசுப், ராமநாதபுரம் ரோட்டரி கிளப் முன்னாள் உதவி ஆளுநர் பி.முனியசாமி, ராமநாதபுரம் குற்றப் புலனாய்வு தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் எஸ்.சரவண பாண்டி சேது ராயர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். கியூ பிராஞ்ச் தலைமை காவலர் டிஆர்எஸ் சுதாகர், வருமான வரி துறை எம்.சஞ்ஜீவ் கனி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்.சந்தான கருப்பு, கே. தட்சிணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கே.கோபிநாத், மின்வாரிய தணிக்கையாளர் டி.சவுந்தர பாண்டியன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஏ.சதாசிவம், கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர் எஸ். மகேஸ்வரி, ஸ்டேட் வங்கி ஊழியர் வி.வெங்கடேஸ்வரி உள்ளிட்டோர் பேசுகின்றனர். ராமநாதபுரம் சுரேஷ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜேஷ் குமார் நன்றி கூறுகிறார். சுரேஷ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் அகாடமி ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்றுநர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!