Home செய்திகள் மனிதம் வெல் அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரத்தில் நலிவடைந்த 500 குடும்பத்தினக்கு நிவாரணம்

மனிதம் வெல் அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரத்தில் நலிவடைந்த 500 குடும்பத்தினக்கு நிவாரணம்

by mohan

நாகப்பட்டினம் சிஎஸ்ஐ., மேல்நிலைப்பள்ளி 1987 ஆம் ஆண்டு முதல் 1994 வரை படித்த மாணவர்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு மனிதம் வெல் அறக்கட்டளை உருவாக்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். ஆதரவற்ற, ஏழை மாணாக்கருக்கு கல்வி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மனிதம் வெல் அறக்கட்டளை செய்து வருகிறது

அறக்கட்டளை தலைவர் ஈரோடு சீனிவாசன் சுப்ரமணியன், துணைத் தலைவர் முகமது இம்ரான் பாஷா, செயலர் திருவாரூர் சீனிவாசன் கதிர்வேல், துணை செயலர் சத்யா சிவ ஷண்முகம், பொருளாளர் ராமலிங்கம், கோமதி நாகராஜன், மருத்துவர் எடிண்டன் ஆறுமுகம், செந்தில் வேலன், கரூர் கதிர்வேல், கேப்டன் சித்திக், மோகன், பிரகாஷ் சந்திரசேகரன், ராஜ்மோகன், கனேஷ், ஷாகுல், மீரான், பஹ்ரு, சரவணன் , ரஞ்சனி மகேஷ், விஜயராஜா, ரஃபிக் அஹமது, முகமது பைசல் அலி, சுந்தர் ராஜ், ஜெய் தமிழ் சுந்தர், ஆகியோர் கொண்ட குழு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏழை எளியோருக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மனிதம் வெல் அறக்கட்டளை தன்னார்வலர் ஒருவரின் நிதி உதவியில் ராமநாதபுரத்தில் 500 குடும்பங்களுக்கு ராமநாதபுரம் வேலு மாணிக்கம் குழும நிர்வாகி வேலு.மனோகரன் தலைமையில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. ராமநாதபுரம் என்எச்.ஆர்த்தோ கேர் எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் பைரோஸ்கான்,ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவனை தலைமை மருத்துவர் ஆசிக், ராமநாதபுரம் சுங்க துறை பணியாளர் மண்டபம் முகமது அப்துல் காதர், தடகள விளையாட்டு சங்க மாவட்ட செயலர் இன்பா ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!