Home செய்திகள் பெரியாரியம் பற்றி ரஜினிகாந்த் இவ்வாறு எதிர்மறையாகப் பேசுவது முதல் முறை அல்ல.!

பெரியாரியம் பற்றி ரஜினிகாந்த் இவ்வாறு எதிர்மறையாகப் பேசுவது முதல் முறை அல்ல.!

by Askar

‘துக்ளக்’ விழாவில் ரஜினிகாந்த் பெரியார் பற்றிச் சொன்ன தவறான தகவலுக்கும் கருத்துக்கும் தலைவர்கள், சிந்தனையாளர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால் இத்தனை நாட்கள் கழித்து இன்றுதான் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து, தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார். பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும் கூறியிருக்கிறார். அந்தப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை ஜெராக்ஸ் காப்பி எடுப்பதற்கு அவருக்கு இத்தனை நாட்கள் ஆகி விட்டன போலும்.

பெரியார் அப்போது நடத்திய பேரணியில் ராமன்-சீதை சிலை ஆடையின்றி, செருப்பு மாலை அணிவித்துக் கொண்டுவரப்பட்டதாக அன்றைய சில பத்திரிகைகளில் செய்தி வந்தது உண்மை. ஆனால், அதற்காக வழககுத் தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் அந்தப் பத்திரிகைகள் சார்பில் தவறான செய்திக்காக மன்னிப்புக் கேட்கப்பட்டது. இந்தச் செய்தியை ரஜினி ஏன் தெரிந்துகொள்ளவில்லை?

பொதுவாக அவர் மேடைகளில் அந்த நேரத்தில் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுகிறார் என்றுதான் கருதப்படுகிறது. ஆனால் இன்று அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து, திட்டமிட்ட முறையிலேயே பெரியார் பற்றிப் பேசினார் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது.

பெரியாரியம் பற்றி ரஜினிகாந்த் இவ்வாறு எதிர்மறையாகப் பேசுவது முதல் முறை அல்ல. முன்பு கலைஞர் தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலேயே கூட, பெரியாரின் நாத்திகக் கருத்துக்கள் இனிமேல் தமிழகத்தில் எடுபடாது என்று பேசினார். அதற்கு ஏன் கலைஞர் பதில் சொல்லவில்லை என்ற கேள்வி கூட அப்போது எழுந்தது.

பெரியாரைக் கடவுள் மறுப்பாளராக மட்டும் சித்தரிப்பது, அதிலும் குறிப்பாக இந்துக் கடவுள்களை எதிர்த்தவர் என்பதாகச் சொல்லி விமர்சிப்பது யாருடைய வேலை? அவர்களுடைய குரலை இவர் எதிரொலிக்க வேண்டிய தேவை என்ன வந்தது?

பெரியாரியம் என்றாலே கடவுள் மறுப்பு மட்டும்தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதிலேயே ஒரு உள்நோக்கம் இருக்கிறது. நாத்திகக் கொள்கை அவருடைய விரிந்த இயக்கத்தின் ஒரு பகுதிதான். சமூக நீதி உள்ளிட்ட அவருடைய முக்கியமான பல வரலாற்று மாற்றங்களில் பெரியாரின் பங்களிப்புகளை மறைக்கிறார்கள்.

இன்று அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் ஏன், ஆலயங்களில் கூட, அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்தவர்களையும் பார்க்க முடிகிறதே, அது பெரியார் இல்லாமல் சாத்தியமாகிவிட்டதா? எந்தத் துறையானாலும் நாங்கள் சாதிக்கிறோம் என்று பெண்கள் புறப்பட்டுவிட்டார்களே, அதற்குப் பெரியாரியம் முக்கியமானதொரு காரணமல்லவா? கோவில் சேவைக்கு எனத் தள்ளிவிடப்பட்ட பெண்கள் சூறையாடப்பட்டு வந்தார்களே, அந்த தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது பெரியாரின் பங்கு முக்கியமானது அல்லவா?

ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வார், பிறகு அதை மாற்றிச் சொல்வார் என்ற இமேஜ் ரஜினி மீது படிந்திருக்கிறது. தனது கருததில் உறுதியாக இருப்பதில்லை என்ற இமேஜ் தொடரக்கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக நின்றால் அவருக்கு ஆதரவளிப்பதாக சுப்பிரமணியசாமி கூறுகிறார். அரசியல் நுழைவுக்கு இப்படி உறுதியாக இருக்கிற இமேஜ் உருவாகவேண்டும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறாரோ என்னவோ!

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com