Home செய்திகள் மாணவர்களின் நலன்கருதி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைவருக்கும் தேர்ச்சியளித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி:-தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம்..

மாணவர்களின் நலன்கருதி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைவருக்கும் தேர்ச்சியளித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி:-தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம்..

by Askar

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 ந்தேதி தொடங்க இருந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது வரை தேர்வு நடக்குமா நடக்காதா மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழப்பம் நீடித்துவந்தது.

நாளுக்குநாள்கொரோனா விஸ்வரூபமெடுத்துவருவதினால் மார்ச் மாதம் தேர்வு நடைபெற இருந்த தமிழத்தில் கொரோனா தொற்று 9 பேரை மட்டுமே தொற்றியிருந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று 33 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா மின்னல் வேகத்தையே முந்தி பரவிவருகிறது. ஜுன் 15 ல் பொதுத்தேர்வு என்பது பொதுவாகவே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தாலும் தொற்று பரவுவதிலிருந்து குறைக்க முடியுமே தவிர தடுப்பது இயலாது என்பது நடைமுறை உண்மை.

பொதுத்தேர்வினை ரத்துசெய்ய தொடக்கத்திலிருந்து முதல்குரலாகவும் தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்திவந்தோம். அதனை தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர்,பா.ம.க. மதிமுக உள்ளிட்ட அரசியல்கட்சித்தலைவர்கள் அனைத்து ஆசிரியர் அமைப்புகள் ,பெற்றோர்கள் தொடர் வலியுறுத்ததின் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்துசெய்ததோடு விடுபட்ட 11 ஆம் வகுப்பு தேர்வினை முழுமையாக ரத்து செய்த மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும்,ஊரடங்கு உத்தரவால் மாணவர்களும், பெற்றோர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து மன உளைச்சலில் இருந்ததால் பொதுத்தேர்வு ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாக்கியுள்ளது.

மாணவர்களின் நலன்கருதி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைவருக்கும் தேர்ச்சியளித்த மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கும்,எதிர்கட்சித்தலைவர்,பாமக,மதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல்கட்சிகளுக்கும் ஆசிரியர் ,பெற்றோர் அமைப்புகளுக்கும்,செய்திகளை உடனுக்குடன் அரசுக்கு எடுத்துசென்ற ஊடகம் பத்திரிகைகளுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!