Home செய்திகள் மதுரை பரவையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பரவை பி காலனி குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கம் குடியிருப்பு வாசிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

மதுரை பரவையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பரவை பி காலனி குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கம் குடியிருப்பு வாசிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

by mohan

பரவையில் பி காலனி குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கம் விரிவாக்கப்பகுதி குடியிருப்புகளுக்கு 35.ஆண்டுகளுக்கு மேலாக தார்சாலை வசதி குடிநீர் உள்ளிட்ட திட்ட பணிகளை செய்து தராமல் இழத்தடிக்கு வரும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி பெண்கள் .உள்ளிட்ட100.க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி கோஷங்களை எழப்பினர்.மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி 14 .வார்டுக்குட்பட்ட விரிவாக்கம் பகுதியான பி.காலணி குடியிருப்பில் சுமார் 100.க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது.லேவுட் அங்கீகாரம் பெற்ற .இக்குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த 35.ஆண்டுகளுக்கு மேலாக தார்சாலை வசதியின்றியும் குடிநீர் இணைப்பு இல்லாமலும் நீடித்து வருகின்றது. இது குறித்து பலமுறை சம்பந்தபட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் புகார் மனு கொடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக பேரூராட்சி நிர்வாகம் இருந்துவரும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இக்குடியிருப்பு சங்க நிர்வாகிகள் ரவி .மாடசாமி. சவரிமுத்து.மோகனசுந்தரம் ஆகியோர் தலைமையில் பெண்கள் 50.க்கு மேற்ட்ட குடியிருப்பு பகுதி சேர்ந்தவர்கள். பரவை பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர் .இதையெடுத்து.சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ்வரி சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ்.செயல் அலுவலர்பொறுப்பு. ஜெயலெட்சுமி.இளநிலை உதவியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போராட்டதாரர்கள் தரப்பை சேர்ந்தவர்கள் பெண்கள் சிலர் பேரூராட்சியால் அங்கீகரிப்பட்ட வீட்டு மனுகள் வீடு கட்டி குடியிருந்து வரும் விரிவாக்க பகுதிக்கு ஏன் இது வரை அடிப்படை வசதிகள் செய்து தரமறுக்கின்றிர்கள். என சமரச பேச்சுவார்த்தை செய்ய வந்த. அதிகாரிகளிடம் கேள்வி.? கேட்டு வாக்கு வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பேரூராட்சி அதிகாரிகள் தென்மாவட்ட. மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் மேற்கொள்ள சென்று உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் பதில் கூறியதால் தர்ணா போராட்டைத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 5.மணி நேரம் நீடித்த தர்ணா போராட்டத்தால் பேரூராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!