Home செய்திகள் தொடர்ச்சியாக மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி மின்சார அலுவலகத்தினை முற்றுகையிட்டு விவசாயிகள் கோரிக்கை..

தொடர்ச்சியாக மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி மின்சார அலுவலகத்தினை முற்றுகையிட்டு விவசாயிகள் கோரிக்கை..

by ஆசிரியர்

கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் உள்ள பகுதி. இந்த பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் விளைவிக்கப்பட்டு கோவில்பட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு செட்டிகுறிச்சி உப மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மும்முனை மின்சாரத்தை பகுதி நேர மின்சாரமாக மாற்ற மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோவில்பட்டி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி தலைமையில்,தூத்துக்குடி மேற்கு மாவட்ட தலைவர் வெள்ளத்துரை, மாநில துணைத் தலைவர் நம்பிராஜ்,மாவட்ட துணைத்தலைவர் சாமியா ஆகியோர் முன்னிலையில் கயத்தாறு தாலுகா செட்டிகுறிச்சி உப மின் நிலையத்திலிருந்து மும்முனை மின்சாரத்தை இரு முனையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் பின்வரும் கோரிக்கையை வலியுறுத்தி மனுஅளிக்கப்பட்டது.

தற்போது கோடைகாலம் என்பதால் கிணறுகளில் தண்ணீர் வற்றி உள்ளதாகவும், இதனால் நீர் ஊறிய பின்னர் தான் கொஞ்சம், கொஞ்சமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் ஒரு நாளைக்கு ஐந்து முறை தண்ணீர் பாய்ச்சி வருவதாகவும், இது மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.பகுதி நேரம் மட்டும் மின்சார வழங்கினால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்படும். வறட்சியின் காரணமாக கடுமையாக விவசாயம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் , மின்சார வாரியமும் எடுக்க உள்ள நடவடிக்கை, விவசாயிகளுக்கு துயரத்தை ஏற்படுத்தி மட்டுமின்றி இனி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும், எனவே ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மும்முனை மின்சாரத்தை தொடர்ச்சியாக 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் அப்பகுதி விவசாயிகள், கோவில்பட்டி மின்சார வாரிய செயற்பொறியாளர் சாகர் பானுவிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் விவசாயிகளின் கோரிக்கை குறித்து உயரதிகாரிகளுக்கு பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இறுதியில் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!