கீழக்கரையில் மாவீரன் பிரபாகரன் 63வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..

கீழக்கரையில் மாவீரன் பிரபாகரன் 63வது பிறந்த நாள் விழா கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக உறுதி மொழியுடன் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கீழை பிரபாகரன், கீழக்கரை நகர் செயலாளர் மற்றும் முத்துராமலிங்கம், துணை தலைவர், பழனி துணை தலைவர், அயன்ராஜ் பொருளாளர் ஹவ்வில் ரஹ்மான், நகர் இணை செயலாளர் , மகேந்திரன் இளைஞர் அணி துணை செயலாளர், வாசிம் இளைஞர் அணி துணை செயலாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் திரளாக கூடி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ௨ணவு பொட்டலங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

மேலும் இப்பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் கீழ்கண்ட உறுதி மொழியும் எடுத்தனர்.

“மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம் இனிமேலும் ஓயோம் உறுதி!”

வென்றெடுப்போம் தமிழர் உரிமையை

கட்டி எழுப்புவோம் தமிழர் அகிலத்தை

நாம் தமிழர்…..நாம் தமிழர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..