பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு நாள் உரிமை முழக்க மாநாடு சிறப்பாக நடந்தேறியது..

பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு சார்பாக “நாங்கள் சொல்வது என்ன” என்கின்ற அடிப்படையில் நாடு முழுவதும் உரிமை முழக்க மாநாடு எற்பாடு செய்துள்ளனர். முதல்கட்டமாக 07.10.2017 அன்று மதுரையிலும் 08.10.2017 அன்று சென்னையிலும் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக தொல்.திருமாவளவன், திருமுருகன் காந்தி, வேல்முருகன், பாப்புலர்  ஃப்ரண்ட் அமைப்பின் தேசிய தவைவர்கள் மற்றும் பல இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த பெரும்பாலான தலைவர்கள் கலந்து கொண்டு பாஸிசத்துக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள்.

“நாங்கள் சொல்வது என்ன” என்கின்ற அடிப்படையில் முஸ்லிம்களை பொது எதிரிகளாக சித்தரித்து, பாப்புலர் பிரண்ட் அமைப்பு மீது தடை செய்யக்கோரி உளவுத்துறை மூலம் நெருக்கடியை ஏற்படுத்தும் சங்கபரிவார அமைப்புகளை கண்டித்து இம் மாநாட்டின் முக்கிய பல தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

பாசிஸத்தை எதிர்கொள்ள சிறுபான்மை அமைப்பை சார்ந்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று ஒருமித்த கருத்தோடு அனைவரும் முழக்கமிட்டாரகள் என்பது குறிப்பிடத்தக்கது.