Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வியாபாரமாகி வரும் சிசேரியன் முறை குழந்தை பிரசவம்…விழித்துக் கொள்ளுமா சமுதாயம்..

வியாபாரமாகி வரும் சிசேரியன் முறை குழந்தை பிரசவம்…விழித்துக் கொள்ளுமா சமுதாயம்..

by ஆசிரியர்

முன்னோர்கள் காலத்தில் 10க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றெடுத்தவர்கள் கூட மருத்துவமனை பக்கம் செல்லாமல் வீட்டிலேயே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்கள். ஆனால் இன்று அதுவெல்லாம் சரித்திரமாகவும், கதையாகவும் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பிரசவம் என்று எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் 10ல் 8 குழந்தைகள் சிசேரியன் முறையில்தான் பிரசவம் ஆகிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துப் பணி வியாபார மயம் ஆனதும், மக்களிடையே வழிப்புணர்வு குறைந்ததும்தான்.

கடந்த 2014-2015 ஆண்டில் இந்த சிசேரியன் முறையில் பிசவமானவர்களைப் பற்றி நடத்திய ஆய்வு நமக்க பல அதிர்ச்சி தரும் விடைகளைத் தருகிறது. இந்தியாவில் 1993ம் ஆண்டு 2.5 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவம் 2015ம் ஆண்டு 15.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்சமயம் ஆய்வு செய்தால் 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுனர்கள். அதே போல் 2014-2015 ஆய்வுப்படி அரசாங்க மருத்துவமனைகளில் 10 சதவீதம் சிசேரியன் முறையில் பிரசவம் நடக்கிறது என்றும் தனியார் மருத்துவமனைகளில் 31.1 சதவீதம் சிசேரியன் முறையிலேயே பிரசவம் ஆகிறது என்ற அதிர்ச்சி தகவலை இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல் சமீபத்தில் இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 135 பேரில் 107 பேர்களுக்கு சிசேரியன் முறையிலேயே குழந்தை பிரசவிக்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.

இன்றைய நவீன காலத்தில் எதையும் சுலபமாக வேகமாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் சிசேரியன் முறைக்கு பல படித்த மக்கள் ஆளாகிறார்கள். அதற்கு ஒரு படி மேலாக இன்னும் சிலரோ மூட பழக்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பிட்ட நேரத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களை வலியுறுத்தும் சம்பவங்களும் பல இடங்களில் நடக்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனையில் வியாபார பசிக்கு அதிகமாக பலி ஆகுபவர்கள் ஏழை மக்களும் நடுத்தர வாசிகளுமே. பிரசவத்திற்காக செல்பவர்களிடம் குறிப்பிட்ட நேரம் தவறிவிட்டால் மருத்துவமனை பொறுபேற்காது என்று பயத்தை உருவாக்கி சிசேரியன் முறை பிரசவ முறைக்கு சம்மதிக்க வைத்து தனியார் மருத்துவமனைகள் பணம் சம்பாதித்து விடுகிறார்கள்.

ஆனால் 100ல் 95 சதவீத பெண்கள் சுகமாக பிரசவிக்கலாம் என்பதே யதார்த்த உண்மை ஆனால் சரியான விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் இல்லாத காரணத்தினாலேயே அதிகமான மக்கள் சிசேரியன் முறை பிரசவத்துக்கு பலியாகிறார்கள். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் தன்னார்வ அமைப்புகளால் ஆர்கானிக் பேபி (ORGANIC BABY) என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கீழக்கரை போன்ற ஊர்களில் இந்த நவீன காலத்தில் இயற்கை முறையை பின்பற்றி மருத்துமனையை அணுகாமலே சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே கணவனும் மனைவியும் சேர்ந்து சுகப்பிரசவம் பார்த்துள்ளார்கள் என்பதை நாம் கேள்விப்படும் பொழுது நம் கண்கள் ஆச்சரியத்தில் விரிகிறது. அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அனைத்தும் சிசேரியன் முறையில்தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்ற மாயையை நம் ஊரில் உருவாக்கி வைத்துள்ளார்கள். ஆனால் அந்த மாயையை உடைக்கம் விதமாக கடந்த ஆண்டு சென்னையில் முதல் குழந்தையை சிசேரியன் மூலம் பிரசவித்த பெண்மணிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவமாக பிரசவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. அதை விட இந்த இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை பிறந்து 3வது மாதத்திலேயே கருத்தரித்து 14வது மாதத்தில் சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதே போல் கீழக்கரையை சார்ந்த பெண்மணி ஒருவருக்கு சௌதி அரேபியாவில் 4 வது குழந்தையை பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு 16 மணி நேரம் கழித்து சுகப்பிரசவமாக பிரசவிக்க வைத்துள்ளார்கள். ஆனால் நம் ஊரிலோ அனுமதிக்ப்பட்டு சில மணி நேரங்களிலேயே மருத்துவர்கள் ஒரு வகையான பயத்தை உருவாக்கி சிசேரியன் பிரசவம் ஆக்கி விடுவதை நாம் அனுபவத்தில் பார்த்து வருகிறோம். அதே போல் 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிசேரியன் மூலம் பிரசவித்தால் உயிருக்கே ஆபத்து என்பதை இன்றளவு பல பேர் அறியாமல் இருப்பது இன்னும் வேதனையான விசயம். ஆனால் இதற்கெல்லாம் விதி விலக்காக இன்றும் சில மனிதநேயமுள்ள மருத்துவமனைகளில் இயன்ற அளவு சுகப்பிரசவத்தில் பிரவிக்க வைக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.


விரைவில் “வியாபார மயமாகும் சிசேரியன் பிரசவ முறை” – ஒரு அலசல், கீழை நியூஸ் டி.வி யில்…


இந்த சிசேரிய்ன மூலம் பிறக்கும் குழந்தைகள் அதிக அளவில் சத்து குறைபாடாக உள்ள குழந்தைகளாகவே பிறக்கின்றன. அதே போல் பிரசவிக்கும் பெண்களுக்கும் கர்ப்ப பை நோய்கள்,  முதுகு வலி,  கர்ப்ப பை கேன்சர் போன்ற பல வகையான நோய்களுக்கு ஆளாகி குறைந்த வயதிலேயே வயோதிக நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது மிகவும் வேதனையான விசயம்.

பொதுமக்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டிய தருணம் அனைத்து பெண்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது நம் அனைவருடைய கடமை. இதைக் கருத்தில் கொண்டு  கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி ( வெள்ளிக்கிழமை) முகைதீனியா பள்ளி வளாகத்தில் ஆர்கானிக் பேபி எனும் நிகழ்ச்சியை இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெண்மணி மூலம் ஏற்பாடு செய்துள்ளார்கள்.


EID MUBARAK

You may also like

1 comment

Riyaz Ahamed August 27, 2017 - 1:07 am

Assalamu Alaikum wa rahmathullahi wa barakathuhu.,It’s a true message because now a days lot of ✂ surgery pregnant cases. Please awareness to our Muslims Ummah.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com