கீழக்கரையில் உலக தரத்தில் ஜஸ் தயாரிப்பு தொழிற்சாலை – ஓர் புதிய உதயம்…

கீழக்கரையில் இன்று (18-09-2018), ஊர் வரவேற்பு வளைவு அருகில் ” முக்தார் ஐஸ் பிளாண்ட் “என்ற நிறுவனம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் சோதனை ஓட்டம் செய்து கொண்டிருந்த நிறுவனம் இன்று முதல் விற்பனையை துவங்கியுள்ளது.

இது குறித்து முக்தார் அவர்கள் கூறுகையில் ‘ கீழக்கரையில் மீன்பிடிக்கும் தொழில் முக்கிய பங்கு வகிப்பதால் மீனைப் பதப்படுத்த ஐஸ் தேவைப்படும்.இதை கருத்தில் கொண்டு இறைவனின் நாட்டப்படி ஆரம்பித்துள்ளோம். இங்கு வாகனங்கள் நிறுத்தி ஐஸ் கொண்டுபோக வசதியும், மின்சாரம் தடை காலங்களில் ஜெனரேட்டர் வசதியுடன் நவீன இயந்திரங்கள் கொண்டு 17 நிமிடங்களில் உடனுக்குடன் உற்பத்தி செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இங்கு மீனை பதப்படுத்துதல் தேவைக்காக மட்டுமின்றி, விசேச வீடுகளின் வரவேற்புக்கு தேவைப்படும் ஐஸ்கள், சர்பத், ஜுஸ் கடைகள் போன்ற உணவு தேவைகளுக்காக சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் ஐஸ் உற்பத்தி செய்து தருகிறோம். இதை பாக்கெட் போட்டு விற்பனை செய்ய உள்ளோம் ‘என்றார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..