தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம் மற்றும் தீயணைப்புதுறை சார்பில் ஆய்வு நடந்தது. இதில் மருத்துவமனை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்சாரம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 நபர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மருத்துவமனை வளாகம் முழுவதும் தீயணைப்பான்கள் தேவையான இடங்களில் பொருத்தப்பட்டு சரியான நிலையில் இயங்குகிறதா எனவும், அனைத்து மின் மாற்றி அறைகளையும் பார்வையிட்டு அதனுள் எளிதில் தீப்பற்றக்கூடிய தேவையில்லாத பொருட்கள் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என்றும், சமையலறையில் உள்ள கேஸ் சிலிண்டர்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாத இடங்களில் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்ந்தனர். ஆய்வின் இறுதியில் மருத்துவமனையின் பணியாளர்களுக்கு தீ மற்றும மின் விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாத்து கொள்ள தேவையான முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். ஆய்வு மேற்கொண்டு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கிய மின்சாரம், பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.