Home செய்திகள் வீ.கே.புதூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

வீ.கே.புதூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

by mohan

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் அரசு நிர்ணயித்த விலையில் அனைத்து உரங்களும் தேவையான அளவுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது நிலவிவரும் உரத்தப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவும், தனியார் உரக்கடைகளில் மூட்டைக்கு விவசாயிகள் ரூபாய் 150 முதல் 200 வரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையை மாற்றிடவும், வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் தளர்வுகளுக்கு மட்டுமே உரம் கிடைக்கும் நிலையை மாற்றிடவும், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் அரசு நிர்ணயித்த விலையில் அனைத்து உரங்களும் தேவையான அளவுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்கவும் மத்திய மாநில அரசுகளையும் கூட்டுறவு துறையையும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீரகேரளம்புதூரில் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் சங்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் விவசாய சங்க தாலுகா பொறுப்பாளர்கள் கனகராஜ், வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை CPM கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பின் குணசீலன் துவக்கிவைதார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி விவசாய கங்க பொறுப்பாளர்கள் ராமர் பாண்டியன், அதிசயபுரம் கணேசன், CPM கட்சி வீரகேரளம்புதூர் கிளைசெயலாளர் ராதாகிருஷ்ணன், கட்டுமான சங்க தாலுகா பொறுப்பாளர் குருசாமி, பீடி சங்க தாலுகா தலைவர் பால்ராஜ், வீராணம் Cpm கிளை செயலாளர் சுப்பிரமணியன், CPM கட்சி தாலுகா குழு செயலாளர் பாலு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் நிறைவுரை ஆற்றினார். திருவாழியன் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!