கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வீரசிகாமணி கிராமத்தில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வீரசிகாமணி முகையதீன் சுன்னத் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹக்கீம் சேட் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசுடன் இணைந்து தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள்,தொண்டுநிறுவனங்களும் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் வீரசிகாமணி கிராம பகுதியில் முகையதீன் சுன்னத் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இணைந்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி 29.06.21 செவ்வாய் கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இதில் முகையதீன் சுன்னத் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் பீர்முஹம்மது தலைமை வகித்தார். முதார்மைதீன் (திவான் ஒலி ஹார்டுவேர்ஸ் உரிமையாளர்), பள்ளியின் பொருளாளர் பாசித், பள்ளிவாசல் இமாம் சாகுல் பைஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹக்கீம் சேட் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். இதில் முக கவசம் அணிதல்,சமூக இடைவெளி கடைபிடித்தல்,கை கழுவுதல்,தூய்மையை பேணுதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வலியுறுத்தினார். மேலும் கபசுர குடிநீர் பள்ளிவாசல் பகுதி, வீரசிகாமணி பேருந்து நிலையம், மெயின் பஜார்,வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி உள்ளிட்ட ஊரின் முக்கிய பகுதிகளில் வழங்கப்பட்டது. இதில் சங்கரன்கோவில் செயற்பொறியாளர், அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துநர்,பயணிகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஊராட்சி தூய்மை பணியாளர்கள், தொழிலாளர்கள், அரசு அனைத்துறை சார்ந்த அலுவலர்கள்,சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கபசுர குடிநீர் அருந்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகையதீன் சுன்னத் ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.