Home செய்திகள் இறந்த பின்பும் மாற்றுத்திறனாளிக்கு தானமாக மோட்டார் பைக் வழங்கிய TARATDAC-சங்க உறுப்பினர்

இறந்த பின்பும் மாற்றுத்திறனாளிக்கு தானமாக மோட்டார் பைக் வழங்கிய TARATDAC-சங்க உறுப்பினர்

by mohan

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அ.கலையம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்க உறுப்பினர் மாற்றுத்திறனாளி ராமகிருஷ்ணன் கடந்த மாதம் இயற்கை எய்தினார்.மேலும் அவர் உயிருடன் இருந்த காலத்தில்  சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கொஞ்சமும் தயக்கமின்றி தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பின்னர் மாற்றுத்திறனாளிகளின் மேல் அளவுகடந்த பாசம் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் பயன்படுத்திய மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு தானமாக அளிக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர். இந்த தகவலை TARATDAC-யிடம் அவரது குடும்பத்தார் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் பாலக்குறிச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கருப்பையா மிகவும் வறிய நிலையில் கஷ்டப்பட்டு வாழ்ந்துவரும் நிலையில் சுயமாக தொழில் செய்து பிழைக்க வசதியாக பைக் இருந்தால் அனைத்து இடங்களுக்கும் சென்றுவர ஏதுவாக இருக்கும். எனவே, சங்கத்தின் மூலமாக தனக்கு பைக் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து இருந்தார்.அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு அவருக்கு பைக் வழங்க இயலாது என்பதால் தனியாரிடமிருந்து பைக் பெற்று தருகிறோம் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் 03.09.19 அன்று ராமகிருஷ்ணன் பயன்படுத்திய மோட்டார் பைக்கை கருப்பையாவின் வீட்டிற்கே சென்று சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் மூலமாக தானமாக வழங்கப்பட்டது.

இறந்த துக்கம் மாறாத நிலையிலும் மாற்றுத்திறனாளிக்கு உதவிய ராமகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!