Home செய்திகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசிய கொடி ஏந்தி பிரமாண்ட பேரணி-ஏராளமானோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசிய கொடி ஏந்தி பிரமாண்ட பேரணி-ஏராளமானோர் பங்கேற்பு

by mohan

குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது.இதை தொடர்ந்து இந்த சட்டம் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதாக நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து கண்டன போராட்டங்கள்,பேரணிகள்,பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 200 மீட்டர் அளவில் தேசிய கொடியை ஏந்தி அமைதி பேரணி நடைபெற்றது. ஆண்கள்,பெண்கள்,உட்பட25,000 பேர் பங்கேற்றனர். கடையநல்லூரில் உள்ள 63 பள்ளிவாசல் முஹல்லா முஸ்லிம்  ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஐக்கிய ஜமாஅத் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர்.

ரஹ்மானியாபுரம் 1வது தெருவிலிருந்து தொடங்கி பேட்டை காதர் முகைதீன் பள்ளிவாசல் வழியாக சந்தை தெரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து நடு அய்யாபுரம் வழியாக பஜார் ரோட்டில் சென்று பிலால் பள்ளிவாசல் வழியாக அல்லிமூப்பன் தெரு, பெரிய தெரு வழியாக 3 கி.மீ தூரம் சென்ற பேரணி மணிக்கூண்டு அருகே நிறைவடைந்தது.பேரணியின் இறுதியில் கண்டன உரை நிகழ்த்தப்பட்டது. இந்த பேரணியில் ஆண்கள்,பெண்கள் உட்பட 25,000பேர் கலந்து கொண்டனர்.இப்பேரணியில் நெல்லை சரக டிஐஜி பிரவின் குமார் அபினவு தலைமையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உட்பட எட்டு டிஎஸ்பி 20 இன்ஸ்பெக்டர் 60 சப்-இன்ஸ்பெக்டர் 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!