Home செய்திகள் கடையநல்லூர் அருகே விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் அருகே விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம்

by mohan

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தில் விபத்தில் பலியானோர்களுக்கு நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடையநல்லூர் அருகே கடந்த மாதம் திரிகூடபுரம் பேருந்து நிறுத்தத்தில் சொக்கம்பட்டிக்கு செல்ல நின்று கொண்டிருந்த பயணிகள் கூட்டத்தில் காவல்துறை பாதுகாப்பு வாகனம் புகுந்ததில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மைதீன்பிச்சை மனைவி மல்லிகா (எ) ஆயிஷா பீவி(39) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த மைதீன்பிச்சை மகள் இர்பான் ஆசியா (15) அதே தெருவை சேர்ந்த தீன் ஒலி மகள் கண்சாள் மஹரிபா பீவி (40) ஆகிய 3 ஏழை பெண்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் உயிரிழந்த பெண்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்தவரின் சடலங்களை அடக்கம் செய்ய மறுத்து வந்தனர். அதன் பின்னர் உடனே அரசு சார்பில் நிகழ்விடத்தில் இறந்த ஆயிஷாவிற்கு மட்டும் உடனடியாக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ 3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இறந்த மற்றவர்களுக்கு இதுவரை நிவாரண நிதி வழங்காததை கண்டித்து மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திரிகூடபுரம் பேருந்து நிறுத்தத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபூபக்கர் தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், திமுக ஒன்றியசெயலாளர் செல்லத்துரை,முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், செயலாளர் இக்பால், கடையநல்லூர் நகர நிர்வாகிகள் செய்யது மசூது,அப்துல் லத்தீப்,தொகுதி அமைப்பாளர் ஹைதர்அலி,திமுக மாநில பேச்சாளர் இஸ்மாயில், திரிகூடபுரம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நிவாரணம் வழங்க வலியுறுத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!