Home செய்திகள் முதுகுளத்தூர் தாலுகா வருவாய் தீர்வாய தணிக்கை நிறைவு

முதுகுளத்தூர் தாலுகா வருவாய் தீர்வாய தணிக்கை நிறைவு

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1428ஆம் வருவாய் தீர்வாய தணிக்கை நிறைவு நாளான நேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் மாவட்ட ஆட்சியர் பெற்றுபயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களுக்கான 1428-ஆம் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை ஜூன் 19 துவங்கி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர்,மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் துணை ஆட்சியர்கள் நிலை அலுவலர்கள் தலைமையில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்தணிக்கை நடைபெற்று வருகிறது. 9 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற முகாம்களில் ஜூன் 26 வரை4,325 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முதுகுளத்தூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட 6 உள்வட்டங்களில் உள்ள 46 குக்கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய தணிக்கை முகாமானது முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 19 முதல் நிறைவு நாளான நேற்று வரை 1,322 மனுக்கள் பெற ப்பட்டுள்ளன. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மாதாந்திர உதவித்தொகை வேண்டி 771 மனுக்கள், பட்டா மாறுதல் வேண்டி 208 மனுக்கள், பட்டா திருத்தம் வேண்டி 31 மனுக்கள்,இதர மனுக்களாக 312 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் தகுதியான நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. நிறைவு நாளான நேற்று 35 பயனாளிகளுக்கு பட்டா திருத்தம்,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மீதமுள்ள மனுக்கள் மீது உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்கள் மீது அரசு விதிகளுக்குட்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல தள்ளுபடி செய்யப்படும் மனுக்கள் தொடர்பாக உரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக மனுதாரருக்கு பதிலளிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஆ.திருஞானம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, வட்டாட்சியர்கள் மீ.மீனாட்சி, தமீம்ராஜா,சரவணக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!