இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக விவசாய விலை பொருளுக்கு விலை நியமனமும், டெல்லியில் போராட்டம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறக் கோரியும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விவசாய சங்க தலைவர் முத்துராமு, சிபிஎம் முதுகுளத்தூர் தாலுகா செயலாளர் முருகன், தாலுகா குழு உறுப்பினர்கள் குருசாமி, தர்மலிங்கம், அரியராஜ், முத்துமணி, அரசு போக்குவரத்து கழக சிஐடியு நிர்வாகி திருமலை, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் அங்குதன், தலைவர் சண்முகையா, பொருளாளர் முருகேசன், வீரசெம்பன், தர்மலிங்கம், கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
61
You must be logged in to post a comment.