Home செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி…

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி 26/01/2019 அன்று காலை 9.30 மணியளவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் எமது கல்லூரி முதல்வர் Dr. A.R. நாதிரா பானு கமால் அவர்கள் தலைமையில், சிறப்பு விருத்தினர் Dr. B.வித்யா பிரியதர்ஷினி, ஓமியோபதி மருத்துவர் மற்றும் உளவியல் அறிவுரையாளர், ஆரோக்கியா ஓமியோ கேர், இராமநாதபுரம் அவர்கள் கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து கொடி பாடல் பாடி இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குடியரசு தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியானது வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி S. பாத்திமா ஷிபானா இறைவணக்கத்துடன் தொடங்கியது. மேலும் இளைஞர்கள் படித்தவர்கள் அரசியலில் ஈடுபடவும், நூறு சதவீகிதம் ஓட்டு போட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஒப்பனை நாடகம் நடித்து மாணவிகள் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R நாதிரா பானு கமால் அவர்கள் 70 வது குடியரசு தினம் அனுசரிக்கப்படுவதையும், சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுபடுத்தி, சுதந்திரம் பெற்று இரண்டரை ஆண்டுகளில் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்திய நாளே குடியரசு தினம் என்று வரவேற்புரை நல்கினார்.

பின்பு முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருத்தினர்க்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் கணிதவியல் துறையைச் சார்ந்த M.அபிநயாவும், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த M.அர்ஷத் நிஷாவும் குடியரசு தின சிறப்புகளைப் பற்றி தனது பேச்சுத் திறமையால் வெளிப்படுத்தினார்கள்.

பின்பு மாணவிகள் குழுவாக இணைந்து ஜெய்ஹிந்த் திரைப்பட பாடலைப் பாடினார்கள். அவர்களைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் Dr. B.வித்யா பிரியதர்ஷினி தனிமனிதனாக நாட்டில் மதிக்கத்தக்க நபராக நடந்து கொண்டு இந்தியன் என்ற அடையாளத்தை பெருமை சாற்ற வேண்டும் என்றும் நடை, உடை, பாவனை, கடின உழைப்பு, கல்வி என அனைத்தும் திறமையுடனும் ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் திறமையில்லாத மனிதனை சமுதாயம் அங்கீகரிக்காது என சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை பாரத இயக்கம் நடத்திய வினா விடை போட்டியில் கலந்துக் கொண்ட மாணவிகளுக்கும், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடைப்பெற்ற பொங்கல் விழா போட்டியில் கலந்துக் கொண்ட மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்பு ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி S. பாத்திமா மரியம் நன்றியுரை வழங்கினார். இறுதியாக தேசிய கீதத்துடன் இனிதே நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!